ஆணவ படுகொலையை தடுத்திட கோரி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம்

ஆணவ படுகொலையை தடுத்திட கோரி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம்
X

விழுப்புரத்தில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.

ஆணவ படுகொலை தடுக்க விழுப்புரத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் விழுப்புரம் மாவட்ட 4- வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் எஸ்.முத்துக்குமரன், மாவட்டத் துணைத் தலைவர் வி.ஜெயராமன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.அமுதா ஆகியோர் தலைமை தாங்கினார்.மாநாட்டில் மாவட்டத் துணைச் செயலாளர் எம்.தமிழரசன், மாவட்டத் துணைத் தலைவர் என்.மேகநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார், மாநாட்டில் மாநில துணைச் செயலாளர் பா.செல்வன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார், மாநாட்டில் மாவட்ட செயலாளர் ஏ.சங்கரன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார், மாவட்ட பொருளாளர் எஸ். சவுரி வரவு செலவு கணக்கை சமர்பித்தார்,

மாநாட்டில் தலித் முன்னுரிமை கூட்டமைப்பு தலைவர் சி.நிக்கோலஸ்,சி.பி.எம். மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், வட்ட செயலாளர் ஆர்.கண்ணப்பன், வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் சே.அறிவழகன், மாவட்டத் தலைவர் எஸ.பிரகாஷ், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ஆர்.தாண்டவராயன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் வி.உமாமகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநாட்டில் மாநிலத் துணைத் தலைவர் ஜி ராமசாமி கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்.


இந்த மாநாட்டில் ஆணவ படுகொலையை தடுக்க வேண்டும் பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும், கலப்பு திருமண தம்பதிகளின் வாழ்க்கையை அரசு உறுதி படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினார்.

மாநாட்டில் மாவட்டத் தலைவராக ஏ.சங்கரன், மாவட்ட செயலாளராக ஏ.கண்ணதாசன், மாவட்ட பொருளாளராக எஸ்.சவுரி உட்பட 34 பேர் கொண்ட மாவட்ட குழு புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.முடிவில் மாவட்ட செயலாளர் ஏ.கண்ணதாசன் நன்றி கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்