விழுப்புரத்தில் மீட்பு குழுவினர் ஒத்திகை

Flood Rescue | Villupuram News
X

விழுப்புரம் பூந்தோட்டம் குளத்தில், தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

Flood Rescue -எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் போது, பொதுமக்கள், 'தங்களை தாங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது,' என தீயணைப்பு மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி காட்டினர்.

Flood Rescue -வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் தீயணைப்புத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழுப்புரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பூந்தோட்டம் குளத்தில், பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ்கண்ணன் தொடங்கி வைத்தார். உதவி மாவட்ட அலுவலர் ஜெய்சங்கர், விழுப்புரம் நிலைய அலுவலர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு நிலைய அலுவலர்கள் ராஜவேலு, பாஸ்கர், முன்னணி தீயணைப்பாளர் ஷாஜகான் உள்ளிட்ட தீயணைப்பு பணியாளர்கள் பலர் கலந்துகொண்டு, பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, அதாவது பேரிடர் காலங்களில் மீட்புக்குழு வருவதற்கு முன்பாகவே வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை பொதுமக்களே தாமாக முன்வந்து காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். மேலும் தீயணைப்புத்துறை பாதுகாப்பு உபகரணங்களான உயிர் காக்கும் மிதவை, மிதவை உடை, ரப்பர் படகு மூலம் மீட்பது குறித்தும் பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், நகரமன்ற கவுன்சிலர்கள் கோதண்டராமன், நவநீதம் மணிகண்டன், ரியாஸ், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், இதேபோன்று மாவட்ட தீயணைப்பு மீட்பு குழுவின் சார்பில் ஆங்காங்கே பொதுமக்களுக்கான வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ளத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளை செய்து காண்பித்தனர் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றதோடு பொதுமக்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது,

மேலும் மீட்பு குழுவினர் செய்து காண்பித்த மீட்பு நடவடிக்கைகள் போன்று பொதுமக்கள் எதிர்வரும் மழையின் போது ஏற்படும் வெள்ளத்தில் தாங்களோ, தங்கள் உறவினர்களோ அல்லது ஆடு, மாடுகளோ குழந்தைகளோ இது போன்ற நிகழ்வுகளில் மாட்டிக் கொண்டால் அவர்களை எப்படி சாதுரியமாக காப்பாற்றுவது என இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு மீட்பு குழுவினர் மிக தத்ரூபமாக செய்து காண்பித்தனர் இதனை விழுப்புரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு பார்வையிட்டு மாவட்ட தீயணைப்பு துறைக்கு பாராட்ட தெரிவித்தனர்.

மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளிலும் அல்லது நீர் நிலைகள் நிறைந்த பகுதிகளை ஒட்டி உள்ள பகுதிகளில், இந்த செயல் விளக்க நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தால் பொதுமக்களுக்கு மேலும் ஊக்கமாக இருப்பதோடு அதுவே என்ற வெள்ள நிகழ்வுகளில் காப்பாற்றும் வகையில் தைரியத்தை கொடுக்கும் என அங்கு கூடியிருந்தவர்கள் பேசி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story