செஞ்சி அருகே காணாமல் போன வறட்டு குளத்தை கண்டுபிடிக்க ஆட்சியரிடம் கோரிக்கை
பைல் படம்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஈச்சூரை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் ஜீவா என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.
அந்த மனுவில் எங்கள் கிராமத்தில் வரட்டுக்குளம் இருந்தது. அந்த குளத்து நீரை எங்கள் கிராம மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். நிலத்தடி நீர்மட்டத்திற்கும், விவசாய பாசனத்திற்கும் அந்த குளம் முக்கிய நீர்ஆதாரமாக இருந்தது.
இந்நிலையில்தான் அந்த குளத்தை சில வசதி படைத்தவர்கள் மண் கொட்டி தூர்ந்து போகும்படி செய்துவிட்டனர். எனவே குளத்தை தூர்வாரக்கோரி மாவட்ட ஆட்சியர் செஞ்சி வட்டாட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் ஒரு வருடமாகியும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குளம் இருந்த இடத்தை நேரில் வந்து பார்வையிடவும் இல்லை.
எனவே மாவட்ட ஆட்சியர், இதில் தலையிட்டு வரட்டுக்குளத்தை கண்டுபிடித்து தூர்வாரி எங்கள் கிராம மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu