காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஊரக வளர்ச்சி பணியாளர்கள் கோரிக்கை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது
ஊரக வளர்ச்சி துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம் 12.03.2022 விழுப்புரம் ஏஎஸ்ஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் எம்.டேவிட் குணசீலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மாநில கௌரவ தலைவர் கே.ஜெயசந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராம்குமார்,தலைமை நிலைய செயலாளர் வி.பாலாஜி,மாநில பொதுச் செயலாளர் த.முத்துக்குமார் தமிழ் நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள்மாநில துணை பொது செயலாளர் சி.அருணகிரி, தமிழ் நாடு சாலை பணியாளர் சங்க பிரசார செயலாளர் பி.குமரவேல், சி.செல்லப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்துரை வழங்கினர். மாநில தலைவர் கே.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில், மாநில அளவில் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப வேண்டும். புதிய திட்டங்களை அமல்படுத்துவதில் கால அவகாசங்கள் வழங்க வேண்டும். நூறு நாள் திட்ட கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மை காவலர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ..5000 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட பிரசார செயலாளர் அப்துல்லா வரவேற்று பேசினார், முடிவில் மாவட்ட பொருளாளர் ஆர்.கோவிந்தசாமி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu