விழுப்புரம் காவல் நிலையம் முன்பு பத்திரிகையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம் காவல் நிலையம் முன்பு பத்திகையாளர்கள் காத்திருப்பு போராட்டம்
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் திமுக ஒன்றிய செயலாளர் குறித்து செய்தி எழுதிய செய்தியாளருக்கு சம்பந்தப்பட்ட திமுக ஒன்றிய செயலாளர் கொலை மிரட்டல் மற்றும் ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி காவல் நிலையம் முன்பு பத்திரிக்கையாளர்கள் தர்ணா மற்றும் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த டிஎஸ்பி நல்லசிவம் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனையடுத்து பத்திரிக்கையாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தை கைவிட்டனர். இது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu