பெண்கள் குழந்தைகள் தங்கும் விடுதிகளுக்கு பதிவு அவசியம்: கலெக்டர் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன்.
தனியார் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோரகள் தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர். இதுதவிர குழந்தைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சிலர் பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக அவ்வப்போது புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இவ்விடுதிகளை முறைப்படுத்தி கண்காணித்திட தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014 கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின்படி விடுதி நிர்வாகிகள் https://tnswp.com என்ற இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் தாங்கள் நடத்தி வரும் விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை 31.08.2022க்குள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், இதனை கண்காணித்திட மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அவ்வாறு ஆய்வின்போது குறைபாடுகளை கண்டறியும் பட்சத்தில் சட்டப்பிரிவு 20-ன் கீழ் விடுதிகள் மற்றும் இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் மீது காவல் துறையின் மூலம் வழக்கு தொடர்ந்து அதிகபட்சமாக 3 ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அனைத்து விடுதி நிர்வாகிகளும் மேற்கண்ட இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணியினை 31.08.2022க்குள் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விடுதியில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள அணுகவும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை (தொலைபேசி எண்: 04146222288) என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu