விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: தயார் நிலையில் காவல்துறை
விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகம்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும், இந்த புயல் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ளவும், அதனால் பெய்யும் கனமழையினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்பு உபகரணங்களுடன் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மேற்பார்வையில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் மாவட்டத்தில் உள்ள 30 சட்டம்- ஒழுங்கு போலீஸ் நிலையங்களிலும் தேவையான அனைத்து மீட்பு உபகரணங்களுடனும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் அவசரகால மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், பொக்லைன் எந்திரம், டயர் டியூப்புகள், கயிறு, மரம் வெட்டும் எந்திரங்கள், அரிவாள், மண்வெட்டி, டார்ச் லைட், சர்ச் லைட், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் கனமழையினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் பேரிடர் மீட்பு படையினருடன் போலீசாரும் முகாமிட்டு அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவ மழையால் தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்படும் இடங்களில் மாவட்ட காவல்துறையினர் முகாமிட்டிருந்தனர் மேலும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தரைப் பாலங்களிலும் தடுப்புகளை ஏற்படுத்தி மக்களை செல்லுமாறு அறிவுறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அதனால் மாவட்டத்தில் மழை வெள்ளங்களின் அடித்துச் செல்வோர் பாதிக்கப்படுபவர் உண்டு எண்ணிக்கை குறைந்தன மேலும் காவல்துறையினர் இதுபோன்ற நடவடிக்கையில் எடுக்கும் போது மக்களுக்கும் மனதளவில் ஒரு தைரியம் உண்டாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று தற்போது உருவாகி பயமுறுத்தி வரும் மாண்டாஸ் புயலை எதிர்கொள்ளும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினர் அனைத்து முன்னேற்பாடுகளுடன் அதிக பாதிப்பு உள்ள இடங்களில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் பொதுமக்களும் அபாயம் உள்ள இடங்களில் செல்லாமல் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பருவமழையின் போது இதுபோன்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதால் மாவட்டத்தில் பாதிப்புகள் குறைந்து மக்களிடம் பாராட்டை பெற்று வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu