விழுப்புரத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் ஜூன் 9ஆம் தேதி வரை தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.சம்பத் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.கோபிநாத், மாவட்ட பொருளாளர் கே.ரஷீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பொது விநியோக திட்டத்துக்கு என்று தனித்துறை உருவாக்க வேண்டும், 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியுடன், அரசு பணியாளர்களுக்கான 31 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும், நியாயவிலை கடைகளில் புதிய 4ஜி சிம் வழங்க வேண்டும், இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஏ.பழனிவேல், டி.ஜெகதீஸ்வரன், பாஸ்கரன், தட்சணாமூர்த்தி,மாவட்ட இணை செயலர்கள் என்.குணசேகரன், எஸ்.தசரதன், ஏ.கதிர்வேலு, டி.பன்னீர்செல்வம் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள 1,254 நியாய விலை கடைகளில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu