விழுப்புரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

விழுப்புரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று ரத்து செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட மக்களின் நிறை, குறைகள் குறித்த மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெற்று வந்தது, இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மாவட்ட மக்கள் நேரடியாக தங்கள் குறைசார்ந்த கோரிக்கை மனுக்களை கொடுத்து, பயன்பெற்று வந்தனர்,

இந்நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது, அதனால் இன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கவிருந்த மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்வதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரி, குளங்கள்,ஆறு,ஓடை ஆகியவற்றிற்கு நீர்வரத்து அதிகரித்து, நிரம்பி உள்ளது, அதனால் துணிதுவைக்க, குளிக்க என இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட மாவட்ட மக்கள் நீர்நிலைகள் அருகே செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!