மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்: 566 மனுக்கள் குவிந்தன
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் ஆட்சியர் மோகன் கோரிக்கை மனுக்கள் பெற்ற போது எடுத்த படம்
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 566 மனுக்கள் பெறப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 566 பேர் மனுக்களை அளித்தனர்.
இம்மனுக்களை பெற்ற ஆட்சியர் மோகன், மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, திருவெண்ணெய்நல்லூர் தாலுகா கொண்டசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சிங்காரவேல் மனைவி பொட்டுக்கன்னி என்பவர் முதியோர் ஓய்வூதியம் கோரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவிற்கு உடனடி தீர்வு கண்டு இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu