திருச்சிற்றம்பலம் ஊராட்சியை பிரித்துக் கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பைல் படம்.
Protest Petition -விழுப்புரம் மாவட்டம்,வானூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் ஊராட்சியை 3 அல்லது 4 ஊராட்சிகளாக பிரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம், இந்த ஊராட்சியின் , 9, 10,12 ஆவது வார்டு உறுப்பினர்கள் மாலதி (8) வது வார்டு, வள்ளி (9)வது வார்டு, தனலெட்சுமி (10)வது வார்டு, கணபதி (12)வது வார்டு, மற்றும் 27வது வார்டு வானூர் ஒன்றியக்குழு உறுப்பினர் காமாட்சி விஜயரங்கன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியதாவது:
பெரிய ஊராட்சியான திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் 12,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சிக்கு கிடைக்கும் நிதி அனைத்து வார்டுகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளான சாலை,கழிவு நீர் கால்வாய் வசதி போன்றவற்றை செய்ய போதுமானதாக இல்லை.
ஏற்கெனவே, தமிழக அரசு அறிவித்தபடி பெரிய ஊராட்சிகளை பிரித்து புதிய ஊராட்சியை உருவாக்கினால் மட்டுமே பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தர இயலும். எனவே, இந்த ஊராட்சி மக்களின் கோரிக்கையை ஆட்சியர் பரிசீலித்து தமிழக அரசின் மேல் நடவடிக்கைக்காக பரிந்துரைக்க வேண்டும்.
இந்த ஊராட்சியை 3 அல்லது 4 ஊராட்சிகளாக பிரித்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும். மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள முடியும். நிர்வாக ரீதியாகவும் இதுவே ஏற்புடையதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu