/* */

விழுப்புரம் அருகே சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

Road Construction -விழுப்புரம் அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள் பாதை கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
X

விழுப்புரம் இருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வெளி வழியா தூக்கி செல்லும் கிராமத்தினர்.

Road Construction -விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் அருகே ஆரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாணிமேடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் அவர்களின் உடலை அதே பகுதி வயல்வெளி மத்தியில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று காலங்காலமாக அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்த மயானத்துக்கு செல்ல கிராமத்தில் இருந்து சிறிது தூரம் மட்டுமே சாலை வசதி உள்ளது. அதன்பிறகு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை அங்குள்ள வயல்வெளி பகுதியாக தூக்கிச்சென்று அடக்கம் செய்து வருகின்றனர். அவ்வாறு செல்லும் போது சில நேரங்களில் சேற்றில் சிக்கி இறந்தவரின் உடலோடு கீழே விழுந்து வருகின்றனர். இந்த அவல நிலையை போக்க மயானத்துக்கு செல்ல பாதைவசதி கேட்டு பல முறை பொதுமக்கள் புகார் அளித்தும் இது வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த முத்துசாமி (65) என்பவர் உடல்நலக்குறைவாக இறந்தார். மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால், அவரின் உடலை உறவினர்கள் விளைநிலங்கள் வழியாக பெரும் சிரமப்பட்டு மயானத்துக்கு .எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.

இதை தவிர்க்க மயானத்துக்கு மாற்றுப்பாதை அமைத்து தரவேண்டும். இல்லையெனில் மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Aug 2022 8:55 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...