சாலையை ஆக்கிரமித்துள்ளதாக தனியார் துணிக்கடை மீது குற்றச்சாட்டு

சாலையை ஆக்கிரமித்துள்ளதாக தனியார் துணிக்கடை மீது குற்றச்சாட்டு
X

சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டட நுழைவாயில்

விழுப்புரம் நகரத்தில் ஒரு தனியார் துணிக்கடை சாலையை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள,கலைஞர் நகர் செல்லும் முக்கிய சாலையில், புதியதாக துணிக்கடை கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

அந்த கட்டிடத்தின் நுழைவாயில் பகுதி, அப்பகுதியில் செல்லும் சாலையை அக்கிரமித்து உள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர். ஆனால் இதனை நகராட்சி கண்டுக்கொள்ளவில்லை என அப்பகுதி பொதுமக்கள் விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!