விழுப்புரம் மக்களின் பாராட்டை பெற்றுவரும் மாவட்ட ஆட்சியர் மோகன்

விழுப்புரம் மக்களின் பாராட்டை பெற்றுவரும்  மாவட்ட ஆட்சியர் மோகன்
X

 மூதாட்டியின் முதியோர் உதவித்தொகை விண்ணப்ப ஆவணங்களை அதே இடத்தில் சரிபார்த்த மாவட்ட ஆட்சியர் மோகன்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன் பொறுப்பேற்றதிலிருந்து மக்களுக்கு பயன் தரும் அதிரடி நடவடிக்கையால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டத்திற்கு உட்பட்ட அனிச்சம் பாளையம் அருகே சென்னை, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமத்துவபுரத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த மூதாட்டி தேன் மொழி என்பவர் ஆட்சியரிடம் தான் கடந்த 3 ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை கேட்டு சம்மந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பித்தும், இதுவரை தனக்கு முதியோர் உதவி தொகை கிடைக்க வில்லை என்று கோரிக்கை வைத்தார்.

உடனடியாக மாவட்ட ஆட்சியர் மோகன் அதே இடத்தில் அந்த மூதாட்டியின் முதியோர் உதவித்தொகை விண்ணப்ப ஆவணங்களை சரிபார்த்தார், அவர் அரசின் உதவித்தொகை பெற தகுதியானவர் என்பதை உறுதி செய்து, அவருக்கு 24 மணி நேரத்தில் உதவி தொகை உத்தரவை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாவட்டத்தில் ஆட்சியர் மோகன் பொறுப்பேற்றதிலிருந்து மக்களுக்கு பயன் தரும் பல அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார், இது மாவட்ட மக்களின் நம்பிக்கை மற்றும் வரவேற்பை பெற்று வருவதோடு, தற்போது இது மாதிரி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என மாவட்ட மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil