விழுப்புரம் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

விழுப்புரம் ஆதிதிராவிடர் நல  அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டம்
X

விழுப்புரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

விழுப்புரத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த பகுஜன் சமாஜ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தியும், கொடுக்கப்பட்ட பட்டா இடத்தை உரிய பயனாளிகளுக்கு அளந்து விடுவதில் மெத்தன போக்கை கடைபிடிக்கும் விழுப்புரம் ஆதிதிராவிடர் நல்ல தாசில்தாரை கண்டித்து, இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள ஆதிதிராவிடர் நல தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர், இதனால் போலீசாருக்கும்,பகுஜன் சமாஜ் கட்சியினரும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது, அலுவலகம் புதுச்சேரி விழுப்புரம் சாலையில் ஓரத்தில் இருந்ததால் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையில் திரண்டு நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்தனர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!