விழுப்புரத்தில் ஒரே தவணையில் பணத்தை கட்ட தனியார் பள்ளிகள் நெருக்கடி

விழுப்புரத்தில் ஒரே தவணையில் பணத்தை கட்ட தனியார் பள்ளிகள் நெருக்கடி
X
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் ஒரே தவணையில் பள்ளி கட்டணத்தை கட்ட வற்புறுத்தி வருவதால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இருந்து இந்த ஆண்டுகளுக்கான கட்டணம் முழுவதையும் ஒரே தவணையில் செலுத்தச் சொல்லி பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சில பெற்றோர்கள் இரண்டு மூன்று பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர், இந்நிலையில் இது போன்ற கொரோனா காலகட்டத்தில் ஒரே தவணையில் ஒட்டு மொத்த தொகையையும் கட்ட முடியவில்லை என கூறுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு மாணவர்களின் கல்வி கட்டணத்தை கல்வி நிலையங்கள் 2 அல்லது 3 தவணை முறையில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!