75-வது சுதந்திர தினத்தையொட்டி விழுப்புரத்தில் தபால் துறை ஊழியர்கள் பேரணி

75-வது சுதந்திர தினத்தையொட்டி விழுப்புரத்தில் தபால் துறை ஊழியர்கள் பேரணி
X

75வது சுதந்திர தினத்தையொட்டி விழுப்புரத்தில் தபால் துறை ஊழியர்கள் பேரணி நடத்தினர்.

75-வது சுதந்திர தினத்தையொட்டி விழுப்புரத்தில் தபால் துறை ஊழியர்கள் பேரணி நடத்தினர்.

இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் ஒவ்வொருவரின் இல்லங்களிலும் நமது நாட்டின் தேசிய கொடியை பறக்க விடுமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையடுத்து புதுச்சேரி தபால் கோட்டத்தின் சார்பில் விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை புதுச்சேரி தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் துரைராஜன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் விழுப்புரம் உதவி கோட்ட கண்காணிப்பாளர் பிரவீன், விழுப்புரம் தலைமை தபால் நிலைய அதிகாரி கமுசு, வணிகப்பிரிவு அதிகாரி சேரன்செங்குட்டுவன், உதவி தபால் அலுவலர் வாசுதேவன், மாவட்ட அஞ்சலக முதன்மை முகவர் வீரன் மற்றும் தபால் நிலைய அலுவலர்கள், பணியாளர்கள், முகவர்கள் பலர் கலந்துகொண்டு தேசிய கொடியை கையில் ஏந்தியபடியும், நாட்டுப்பற்று கோஷங்களை எழுப்பியவாறும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொதுமக்களிடம் 75-வது சுதந்திர தின விழாவில் அனைவரின் இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தலைமை தபால் நிலையத்தில் வந்தடைந்தது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!