விழுப்புரத்தில் 'தாலிக்கு தங்கம்' அமைச்சர் பொன்முடி வழங்கல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 'தாலிக்கு தங்கம்' பயனாளிகளுக்கு அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயணாளிகளுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் திருமணம் முடிந்து தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து காத்திருந்த பயனாளிகளுக்கு சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தாலிக்கு தங்கம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது மாவட்ட அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu