மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சித்தவருக்கு போலீஸ் வலை
Student Rape Case -விழுப்புரம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி விழுப்புரத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் புருஷானூரை சேர்ந்த செல்வம் மகனான பொக்லைன் எந்திர டிரைவர் ராஜ்குமார் (30) என்பவர் மதுபோதையில், அந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
உடனடியாக மாணவி கூச்சலிட்டபடி அங்கிருந்து வீட்டிற்கு ஓடி வந்து விட்டார். பின்னர் இதுகுறித்து அவர், தனது பெற்றோரிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu