விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 108 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 108 பேர் கைது
X

விழுப்புரம் எஸ்பி அலுவலகம்(பைல் படம்)

Villupuram District Police arrested people who were involved in various crimes.

விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 108 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் மது, குட்கா, கஞ்சா, சூதாட்டம் மற்றும் லாட்டரி சம்பந்தமாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. இதில் 63 சாராய வழக்கில் 63 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 96 லிட்டர் சாராயம் மற்றும் 72 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் 12 குட்கா வழக்குகளில் 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1.5 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 4 கஞ்சா வழக்குகளில் 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 380 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுதவிர 10 சூதாட்ட வழக்குகளில் 26 பேரும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 108 பேரை போலீசார் கைது செய்தனர்

பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மவாட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள அவர், அதில் “ஏப்ரல் 27ஆம் தேதி வரை 'ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்தப்பட வேண்டும். கஞ்சா, குட்கா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும். கஞ்சா, குட்கா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.மேலும் பார்சல் மூலம் போதை மாத்திரை, போதை மருந்துகள் விற்பனை செய்பவர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் காவல்துறையினர் அதிரடி சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..