கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
X

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.இந்நிலையில் மாணவியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த சமயத்தில் அதே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரது மகன் தர்மா (21) என்ற கூலித்தொழிலாளி, அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அம்மாணவி கர்ப்பம் அடைந்தார். இதையறிந்ததும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து அவர்கள், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் தர்மா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai solutions for small business