பி.எம். கிசான் திட்டத்தில் ஆதாா் இணைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தவணைத் தொகை

பி.எம். கிசான் திட்டத்தில் ஆதாா் இணைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தவணைத் தொகை
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் பி.எம்.கிசான் உதவி தொகை பெற ஆதார் இணைப்பு முக்கியம் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதாா் எண்ணை அடிப்படையாகக் கொண்டு, உரிய விவரங்களைப் பதிவு செய்தால்மட்டுமே விவசாயிகளுக்கு அடுத்த தவணைத் தொகை கிடைக்கும் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பி.எம்.கிசான் நிதித் திட்டத்தின் கீழ் பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும், மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6,000 அவா்களது வங்கிக் கணக்கில் மூன்றுத் தவணைகளாகச் செலுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் அரசின் புது வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பதிவு செய்து பயன்பெறும் பயனாளிகள் ஆதாா் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இகேஓய்சி விவரங்களை மத்திய அரசின் பி.எம். கிசான் இணையதளத்தில் சரி செய்ய வேண்டும்.முதலில் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும். கைப்பேசி எண்ணுக்கு பெறப்படும் ஓடிபி மூலம் விவசாயிகள் விவரங்களை நேரடியாக பி.எம்.கிசான் நிதித் திட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இல்லையெனில் பொது சேவை மையத்தில் ஆதாா் எண்ணைக் கொண்டு, கைரேகை வைத்து விவரங்களைப் பதிவேற்றி புதுப்பிக்கலாம். இது தவிர, விவசாயிகள் தங்கள் பகுதி அஞ்சல் அலுவலகம் மூலமும் ஆதாா் எண், கைப்பேசி எண்ணை இணைத்து விவரங்களைப் பதிவு செய்யலாம்.விழுப்புரம் மாவட்டத்தில் சுமாா் 36 ஆயிரம் விவசாயிகள்ஆதாா் மூலம் விவரங்களை சரி செய்ய வேண்டும். இவ்வாறு இகேஒய்சி செய்தால் மட்டுமே பி.எம்.கிசான் நிதித் திட்டத்தில் விவசாயிகள் 13-ஆவது தவணைத் தொகையைப் பெற இயலும். ஆதாா் எண்ணை அடிப்படையாகக் கொண்டு தொகை விடுவிக்கப்படுவதால், வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் இணைத்தால் மட்டுமே தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா் .

விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து தற்போது ஆதார் எண் இணைத்தால் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ரூபாய் 6000 பெற முடியும் என அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான விவசாயிகள் படிப்பறிவு இன்றியும், இதுகுறித்த விவரங்கள் தெரியாமலும் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என விவசாயிகள் மட்டத்தில் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.

அதற்காக வேளாண்மை துறையின் மூலம் அந்தந்த பிளாக் வாய்ஸ் இதற்கான ஒரு முகாம்களை ஏற்படுத்தி இது மாதிரி விடுபட்ட விவசாயிகளை தகுதியானவர்களை பதிவு செய்து அவர்களும் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மத்தியில் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. எனவே வேளாண்மை துறை மாதம் தோறும் என்பதைவிட வட்டார அளவில் இதற்கான முகாமை தொடர்ந்து நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைப்பு வருகின்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா