பிளஸ் 1 தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 84.67 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா பிளஸ்-1 தேர்வு முடிவுகளை திங்கட்கிழமை வெளியிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 189 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் அரசு பள்ளிகள் 130 தனியார் பள்ளிகள் 69 உள்ளன.மொத்தம் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 308 பேர் ஆகும். இதில் 19 ஆயிரத்து 517 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 2019 ஆம் கல்வி ஆண்டை விட 8 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 795 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 12 ஆயிரத்து 950 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 84.67 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu