விழுப்புரத்தில் காவல்துறையை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் காவல்துறையை கண்டித்து  மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள். 

விழுப்புரத்தில், காவல்துறையினரை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.முருகன் தலைமை தாங்கினார், சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபகரன் உயிரிழப்பில், சம்பந்தபட்ட காவல் துறையை சேர்ந்த காவல் அதிகாரிகளை பணிநீக்கம் செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி உரிய இழப்பிடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பி.உமா, மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜெ.ஜெயக்குமார், எம்.கே.முருகன், மாவட்ட தலைவர் பாவாடைராயன், ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், பாக்கியராஜ், இளங்கோவன் உட்பட 100 க்கும் மேற்பட்டோர், கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story