அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து அலைகழிப்பு

விழுப்புரம் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு பயணியிடம் இலவசம் இல்லை என்று கூறியும், அரசாணையை மதிக்காமலும் டிக்கெட் வாங்க கட்டாயபடுத்தி டிக்கெட் வாங்கிய நடத்துநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
இது குறித்து அந்த மனுவில் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர். வீ.ராதாகிருஷ்ணன் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளருக்கு இன்று பிற்பகல் 2.30மணியளவில் விழுப்புரம் வட்டம், கோழிப்பட்டு என்ற ஊரில் இருந்து விழுப்புரம் செல்ல மாற்றுத்திறனாளியான திருகுமரன் என்பவருக்க உதவியாளராக அரசு நகரபேருந்து, தடம் எண்-33-ல் பயணித்தேன், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர்கள் நகர பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதித்தை நடத்துனரிட்ம் தெரிவித்து மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர் என்ற வகையில் எனக்கு இலவச பயண சீட்டு வழங்குமாறு கேட்டேன்.நடத்துனர் சீட்டு தரமுடியாது என காட்டமாக மறுத்தார். பயணச்சீட்டு வாங்குமாறு என்னிடம் கடுமையாக பேசினார்.அரசு ஆணையினை குறிப்பிட்டு கூறியும் அதை ஏற்க்கவில்லை. அரசு ஆணை யினை மதிக்காத நடத்துனர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று கடந்த 23.6.22 ல் நடந்த சம்பவம் குறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை, இதே போன்று தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக நடத்துனர்கள் அவமான படுத்துவது தொடருமேயானால், விரைவில் அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu