சேமங்கலத்தில் புகைப்படக் கண்காட்சி

சேமங்கலத்தில் புகைப்படக் கண்காட்சி
X

விழுப்புரம் மாவட்டம்,சேமங்கலம் ஊராட்சியில் நடந்த அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியில்,  புகைப்படங்களை பார்த்து ரசித்த பொதுமக்கள்.

விழுப்புரம் மாவட்டம், சேமங்கலம் ஊராட்சியில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியை மக்கள் பலர், பார்த்து மகிழ்ந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், சேமங்கலம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்கள், நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயண திட்டம், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வித்திட்டம், இருளர், பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம், கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை சேமங்கலம் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்தனர்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!