கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் பற்றி புகார் தெரிவிக்க தொலைபேசி எண்
விழுப்புரம் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் அறிவுறுத்தல்படியும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் மற்றும் முதன்மை செயலாளர்/தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தலின் படியும், விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழிகாட்டுதலின் படியும் தமிழ்நாடு முழுவதும் கொத்தடிமைத் தொழிலாளர் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்து புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி அழைப்பு எண். 1800 4252 650 உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து தற்போது எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். மூலம் 155214 என்ற எண் உருவாக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்து புகார் தெரிவிக்க மேற்கண்ட கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கொத்தடிமை பணிகளில் குழந்தைகள் ஈடுபட்டு வந்தால் அதனை யாராவது கண்டறிந்தால் உடனடியாக இந்த தொலை பேசி எண்ணில் தகவல் தெரிவித்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் கூறி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu