ஏரி மண் கொள்ளை தடுக்க விழுப்புரம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

ஏரி மண் கொள்ளை தடுக்க விழுப்புரம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
X

மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் இன்று ஏரியில் நடக்கும் மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே காரணதாங்கல் ஏரியில் மண் கொள்ளைக்கு துணை போன வட்டாட்சியர், உதவி ஆய்வாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் ஜேசிபி பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனை சி.பி.எம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி தலைமையில் கட்சி மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், வட்ட செயலாளர் எஸ்.கணபதி, தவிச வட்ட தலைவர் ராமலிங்கம் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர், மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக தெரிவித்தனர்.

Tags

Next Story
ai marketing future