மக்கள் குறை தீர்க்கும் முகாம்: பொதுமக்கள் சார்பில் 346 மனுக்கள் அளிப்பு

மக்கள் குறை தீர்க்கும் முகாம்: பொதுமக்கள் சார்பில்   346 மனுக்கள் அளிப்பு
X

விழுப்புரத்தில்  நடைபெற்ற  குறைகேட்பு முகாமில்  பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் மோகன்

Grievance Redressal Camp -விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 346 மனுக்கள் பெறப்பட்டன.

Grievance Redressal Camp -விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், தலைமையில் 14- ந்தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் அறிவுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் த. மோகன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 346 மனுக்கள் பெறப்பட்டது அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்டது. பெறப்பட்ட இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்மு.பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா, தனித்துனை ஆட்சியர் (ச.பா.தி.) விஸ்வநாதன், சமூக நலத்துறை அலுவலர் ராஜம்மாள், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தின விழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு கேக் வெட்டி இனிப்பு வழங்கி குழந்தைகள் தினத்தை கொண்டாடினர். அங்கு குழந்தைகள் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் மோகன் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர்கள் பரமேஸ்வரி சரஸ்வதி, மாவட்ட நேர்முக உதவியாளர் சிவா உட்பட அனைத்து துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட மக்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து அனைத்து துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்று வருகிறது இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குறை சார்ந்த மனுக்களை கொடுத்து பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்