அன்பு ஜோதி ஆசிரமத்தை கண்டித்துமாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

அன்பு ஜோதி ஆசிரமத்தை கண்டித்துமாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

அன்பு ஜோதி ஆசிரமத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஆசிரமத்தின் முறைகேடுகளுக்கு துணை போன துறைகளை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடைபெற்ற முறையேடுகளுக்கு துணை போன சம்பந்தப்பட்ட துறைகளின் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பா.முருகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வீ.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

விழுப்புரம் மாவட்டம், குண்டல புலியூர் கிராமத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் காணாமல் போன 16-நபர்களை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரம நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் ஆசிரமத்தின் முறைகேடுகளுக்கு துணை போன விழுப்புர மாவட்ட காவல்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான மனநல காப்பகம் உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் எம்.முத்துவேல், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஏ.வேணு, ஆர்.ரங்கநாதன், அய்யனார், மாவட்டத் துணைச் செயலாளர்கள் எம்.யுகந்தி, சி.கலியபெருமாள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று இந்த அன்பு ஜோதி ஆசிரமத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!