மாற்றுத்திறனாளிகள் அலுவலக சாலையை சரி செய்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
குண்டும் குழியுமான அலுவலக பாதையை சரிசெய்ய மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் புதியதாக மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது, இங்கு தினந்தோறும் கண், காது, கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு சலுகைகள் பெறுவதற்கு வந்து செல்கின்றனர், ஏற்கனவே இந்த அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் இருந்தது, ஆனால் பேருந்து நிலையத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் சென்று வர தூரமாக இருந்தது என்னவோ உண்மை ஆனால் அவர்கள் சென்று வந்த சாலைகள் சரியாக இருந்தது, அதற்கு காரணம் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருந்தது.
தற்போது அந்த அலுவலகம் அங்கு இருந்து கொஞ்சம் தூரமாக அமைந்துள்ளது, ஆனாலும் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை போக்கும் வகையில் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது என்பது வரவேற்கத்தக்கது, இதனை வரவேற்றும்,மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநில அரசுக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கத்தினரும் நன்றி தெரிவித்து வருகின்றனர், இருந்தாலும் அலுவலகம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியவாறு சுற்று சுவரால் பிரிக்கப்பட்டுள்ளது, தற்போது அலுவலகம் செல்லும் சாலை பேருந்து நிலையத்தை சுற்றி செல்லும் தொலைவில் உள்ளது.
ஆனாலும் அந்த சாலை குண்டும் குழியுமாக மாற்றுத்திறனாளிகள் நடந்தோ, வாகனத்திலோ செல்லமுடியாத அளவில் மோசமான நிலையில் உள்ளது, அதில் ஏற்கனவே ஊனத்துடன் வரும் மாற்றுத்திறனாளிகள் அதில் உள்ள பள்ளங்களில் தவறி விழுந்து, மேலும் ஊனம் ஏற்படும் அபாயம் உள்ளது, அதனால் அந்த சாலையை மாவட்ட ஆட்சியர் சீரமைக்க நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வரும் வகையில் சரி செய்து வேண்டும், அல்லது பேருந்து நிலைய சுற்றுசுவரில் வழி ஏற்படுத்தி தர வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது,
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu