விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை இடம்மாற்ற மக்கள் கோரிக்கை

விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை இடம்மாற்ற  மக்கள் கோரிக்கை
X

பைல் படம்.

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக இடம்மாற்ற அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று மக்கள் சமூக பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தேவநாதன் தலைமையில் சங்க நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

அதில் விழுப்புரம் சாலாமேடு பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை செயல்ப்பட்டு வருகிறது. இந்த மதுக் கடை உள்ள பகுதி வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். அவர்களுக்கு இங்கு செயல்படும் மதுக் கடை பெரும் இடையூறாக இருந்து வருகிறது. ஆகையால், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வரும் அந்த டாஸ்மாக் மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அதில் குறிபிட்டு உடனிருந்தனா்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!