தடுப்பூசி போடச்சொல்லி கட்டாயப்படுத்துவது சுகாதார துறையா? மாவட்ட நிர்வாகமா?

தடுப்பூசி போடச்சொல்லி கட்டாயப்படுத்துவது சுகாதார துறையா? மாவட்ட நிர்வாகமா?
X
விழுப்புரம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தான் நூறுநாள் வேலை மற்றும் ரேசன் பொருட்கள் என கூறப்படுவதாக குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல் அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதின் பயனாக கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று விழுப்புரம் மாவட்டத்தில் கட்டுக்குள் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மெகா தடுப்பூசி முகாமில் சுமார் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை மாவட்டத்தில் எந்த விதமான பக்க விளைவுகளும், அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தில் பொதுமக்கள் தாங்களே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலைக்கு மாறி வருகின்றனர்,

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு கிராமத்தில் உள்ள செவிலியர்கள், அவர்கள் பணிக்கு உட்பட்ட கிராம பகுதிகளுக்கு சென்று கிராம மக்களை மிரட்டி தடுப்பூசி போட செல்லி கட்டாய படுத்துகிறார்கள் என்றும் மேலும் அப்படி தடுப்பூசி போடவில்லை என்றால் நூறு நாள் வேலை பணம் மற்றும் ரேசன் பொருள் கிடைக்காது என்று கூறுகிறார்கள் என பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இவ்வாறு கட்டாயப்படுத்துவது மாவட்ட நிர்வாகமா அல்லது சுகாதாரத்துறையா என்ற குழப்பமும் மக்களிடையே நிலவுகிறது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!