விழுப்புரத்தில் பட்டை நாம போராட்டம்

விழுப்புரத்தில் பட்டை நாம போராட்டம்
X

நான்கு மண்டல தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், பட்டைநாம போராட்டம் விழுப்புரம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன் நடந்தது.

விழுப்புரத்தில் சாலைப் பணியாளர்கள் பட்டை நாம போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

நான்கு மண்டல தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், பட்டைநாம போராட்டம் விழுப்புரம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது,

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் அரியலூர் காமராஜ், பெரம்பலூர் ராஜ்குமார்,கடலூர் ஜோசப், விழுப்புரம் மாவட்ட நிர்வாகி ஜெயராமன் ஆகிய கூட்டுத் தலைமை தாங்கினர்.

போராட்டத்தை தொடங்கி வைத்து மாநிலத் துணைத் தலைவர் ரவி தொடக்கவுரையாற்றினார், கோரிக்கைகளை விளக்கி விழுப்புரம் வீரமுத்து, சரவணபவன், அரியலூர் சிவகுமார், அரிச்சந்திரன், கடலூர் ராமர், ஜோசப், பெரம்பலூர் சுப்ரமணியன், கருணாநிதி ஆகியோர் பேசினர். போராட்டத்தில் மாநில செயலாளர் பழனிச்சாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கு. சரவணன் மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். மாநில துணைத்தலைவர் மகேந்திரன் போராட்ட நிறையுரை ஆற்றினார்.முடிவில் போராட்டத்திற்கு வந்திருந்த விழுப்புரம் பழனிவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.

போராட்டத்தில் நிலுவையில் உள்ள போராட்ட கால ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர், அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!