விழுப்புரத்தில் போலீஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

விழுப்புரத்தில் போலீஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
X

விழுப்புரத்தில் தீப்பிடித்து எரிந்து சேதமான போலீஸ் வாகனம்.

விழுப்புரம் அருகே பாதுகாப்பு பணி வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

விழுப்புரத்தில் போலீஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான போலிஸ் வாகனம் பாதுகாப்பு பணி முடிந்து, இரவு அலுவலகம் திரும்பி கொண்டிருந்தது, அப்போது விழுப்புரம் அயினம்பாளையம்,செஞ்சி கூட்டு சாலையின் அருகே வந்த போது வாகனத்தின் முன்பு எஞ்சின் பக்கம் திடீரென புகை வருவதை வாகன ஓட்டி கண்டு திடுக்கிட்டு, அதனை அணைக்க முயன்றார்,

அதற்குள் தீ வேகமாக பரவி வாகனம் முற்றிலும் எரிந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இந்த வாகனம் தற்போது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும் ஜெயக்குமார் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது பயன்படுத்திய வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!