விழுப்புரத்தில் நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
X

7வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி, பஞ்சாயத்து நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

7வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி விழுப்புரத்தில் நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, சிஐடியு கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டத்திற்கு மாவட்ட சிறப்புத் தலைவர் ஆர்.ஜீவா தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் தலைவர் எஸ்.முத்துக்குமரன், செயலாளர் ஆர்.மூர்த்தி, பொருளாளர் வி.பாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கணேசன், வீராசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு