கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம ஊராட்சி களப்பணியாளர்கள்
தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட கீழ்வேலூர் தாலுகா வெங்கிடாங்கால் ஊராட்சியில் பணிபுரிந்து வந்த தூய்மை காவலர்கள் தவமணி, விஜயா, உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எல்லை கிராம ஊராட்சி பார்வதி ஆகியோருக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும்,
தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் அனைவருக்கும் விடுபடாமல் பொங்கலுக்கு முன்பாக போனஸ் மற்றும் நிலுவை ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் டெல்லி அப்பாதுரை, வீரப்பன், சங்கர், கேசவன், சுரேந்தர், ராஜாமணி, ராஜாங்கம், பாண்டியன், சிவக்கொழுந்து, தணிகைவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu