ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் தொடக்கம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊட்டச்சத்து இரு வார நிறைவு விழாவினை முன்னிட்டு,ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி 3-ந்தேதி திங்கட்கிழமை கொடியசைத்து, துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஊட்டச்சத்து இரு வார் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இந்த ஆண்டும் விழுப்புரம் மாவட்டத்தில், 20.03.2023 முதல் 03.04.2023 வரை ஊட்டச்சத்து இரு வார விழா கடைபிடிக்கப்பட்டது. இதன் நோக்கம், வளரிளம் பெண்கள், கர்ப்பினரிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் குழந்தையின் முதல் 1000 நாட்கள், இரத்தசோகை, முறையான கை கழுவுதல், சுகாதார மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் செயல்படும் 1781 அங்கன்வாடி மையங்களில், சிறுதானியங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிய எடை மற்றும் உயரம் கண்காணித்தல் (Swasth Balak Balika Spardha) மேம்படுத்தப்பட்ட அங்கன்வாடி மையங்களை பிரபலப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படுத்தப்பட்டது.
ஊட்டச்சத்து இருவார நிறைவு நாளான இன்று 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது, மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் தொடங்கி, விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு வரை சென்று நிறைவடைந்தது. இப்பேரணியில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து, ஊட்டச்சத்தின் அவசியத்தினை உணர்த்திடும் வகையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல் நிலையை அடைய நான் இன்று உறுதிமொழி ஏற்கிறேன். ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமன கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்வதை நான் உறுதி செய்வேன். ஆரோக்கியம் என்பது சரிவிகித சத்தான ஆரோக்கிய உணவு, தூய்மையான குடிநீர், சுகாதாரம் சரியான தாய்மை மற்றும் பச்சிளம் மற்றும் சிறுகுழந்தைகளுக்கான உணவு ஊட்டும் பழக்கவழக்கங்களில் உள்ளது.
தேசிய ஊட்டச்சத்து இயக்கம் நாடு முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக மாற ஒவ்வொரு வீடு, ஒவ்வொரு பள்ளி, ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு நகரமும் ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் நலவாழ்வு சம்பந்தமான கருத்துக்களை அறிய நான் உதவுவேன். இந்த மக்கள் பேரியக்கத்தின் மூலம் எனது நாட்டில் உள்ள எனது சகோதரிகள், சகோதரர்கள் மற்றும் குழந்தைகள் சிறந்த ஆரோக்கியமானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உருவெடுப்பார். இது என் உறுதிமொழி என அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கோ.அன்பழகி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் சிவா, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மனோசித்ரா, ராஜலட்சுமி, ஜெகதீஸ்வரி, ஜென்சி, டயானா, நந்திதா, சௌமியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu