விழுப்புரம் கோட்ட அளவில் மின் நுகர்வோர்கள் குறைகேட்பு கூட்டம் அறிவிப்பு
விழுப்புரம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் மாதந்தோறும் நடக்கிறது.
மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கோட்ட அளவில் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி விழுப்புரம் மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கும், கண்டமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கும், செஞ்சி செயற்பொறியாளர் அலுவலகத்தில் 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கும், திண்டிவனம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கும் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
மின் நுகர்வோர்கள், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும் அன்று அரசு விடுமுறை நாளாக இருப்பின் விடுமுறைக்கு அடுத்து வரும் வேலை நாளன்று குறைகேட்பு கூட்டம் நடைபெறும். இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் கோட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரவிஜய் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu