விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் புகார் தெரிவிக்க இலவச எண்கள் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் புகார் தெரிவிக்க இலவச எண்கள் அறிவிப்பு
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்.

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க ஆட்சியர் கட்டணமில்லா அழைப்பு எண்களை அறிவித்துள்ளார்.

தேர்தல் புகார்களுக்கு 1800 425 7820 மற்றும் 1800 425 1740 என்ற கட்டணமில்லா தொலைபேசி கலெக்டர் தகவல்.

விழுப்புரம் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார் தெரிவிக்க 1800 425 7820 மற்றும் 1800 425 1740 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான த.மோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளவும் மற்றும் புகார் தெரிவிக்கவும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக (தேர்தல்) பிரிவு, கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தேர்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார்கள் தெரிவித்திட 1800 425 7820 மற்றும் 1800 425 1740 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil