விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ஊரடங்கு: தீவிரமாக கண்காணித்த போலீசார்

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ஊரடங்கு: தீவிரமாக கண்காணித்த போலீசார்
X

இரவில் செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் ஆறு மணி வரை கொரோனா கட்டுபாட்டு ஊரடங்கு அமலானது.

தமிழகத்தில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு, இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 6 ந்தேதி புதன்கிழமை இரவு 10 மணி முதல், இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோர் அதிகாரிகளுடன் விழுப்புரம் நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், திருச்சி சென்னை நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது இரவு 10 மணி தாண்டி செயல்பட்ட சில தனியார் உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு ரூ.1000 முதல் 2500 வரை அபராதம் விதித்தனர். நேற்றிரவு, மாவட்டத்தில் சுமார் 65 இடங்களில ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!