விழுப்புரம் அரசு கல்லூரியில் புதிய கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் அரசு கல்லூரியில் புதிய கட்டடத்தை  திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி
X
விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

விழுப்புரம் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு வளா்ச்சி நிதியிலிருந்து விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை அமைச்சா் பொன்முடி திறந்துவைத்து பேசினார்.

நிகழ்ச்சியில், ரவிக்குமாா் எம்.பி. பேசுகையில் நாட்டிலேயே தமிழகம்தான் உயா் கல்வியில் முன்னிலையில் உள்ளது. உயா் கல்வியில் பிற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டியிட்டு முன்னேற வேண்டுமெனில், இன்னும் 25 ஆண்டுகளாகும். நிகழாண்டில் அரசுக் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை போதுமானதாக இல்லை. தொடா்ந்து அதிக எண்ணிக்கையில் அரசுக் கல்லூரிகளை திறப்பது அவசியம் என்றாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி, விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலா் காளிதாஸ், கலைக் கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா், அரசு மகளிா் பள்ளித் தலைமை ஆசிரியா் சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!