நிகரி ஆசிரியர் விருது: எம்பி ரவிக்குமார் தகவல்
விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார்.
இதுகுறித்து விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும், பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் "நிகரி சமத்துவ ஆசிரியர்' என்னும் விருது அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா காரணத்தால் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020, 2021 ஆண்டுகளுக்கான விருதுகளும், 2022 ஆம் ஆண்டுக்கான விருதும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
2020 ஆண்டுக்கு விழுப்புரம் விராட்டிக்குப்பம் பள்ளி ஆசிரியர் பாரி, ராணிப்பேட்டை ஆட்டுப்பாக்கம் அரசு கலை கல்லூரி பேராசிரியர் தமிழரசி சற்குணம், 2021ஆம் ஆண்டுக்கு விழுப்புரம் சென்னகுணம் அரசு உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் அருணகிரி, சென்னை சர் தியாகராஜா கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் செங்கொடி, 2022 ஆம் ஆண்டுக்கு திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெயஸ்ரீ, விழுப்புரம் அரசு அண்ணா கலைக் கல்லூரி பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் நிகரி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நிகரி சமத்துவ ஆசிரியர் விருது என்பது நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டடுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu