இசைக்கலைஞர்கள் வாத்தியக் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்
மாவட்ட ஆட்சியா் த.மோகன்
விழுப்புரம் :
இசைக் கருவிகள் வாங்குவதற்காக நிதியுதவி பெற விரும்பும் இசைக் கலைஞா்கள் மாா்ச் 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கிராமியக் கலைஞா்களையும், கலைக் குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில் இசைக் கருவிகள், ஆடை, அணிகலன்கள் வாங்க தனிப்பட்ட கலைஞா் ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் 500 கலைஞா்களுக்கு நிதியுதவியை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிதியை பெற தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றவராகவும், பதிவை புதுப்பித்தவராகவும் இருக்க வேண்டும். அவ்வாறு தகுதியுடையவா்கள், மார்ச் 31ந் தேதி படி, 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதுக்குள் பட்டவராக இருக்க வேண்டும். நிதியுதவி பெற விரும்பும் கலைஞா்கள், உறுப்பினா்-
செயலா், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31-பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை- 600 028, தொலைபேசி எண்: 044-2493 7471, என்ற முகவரிக்கு சுய முகவரியிட்ட உறையில் ரூ.10-க்கான அஞ்சல் தலை ஒட்டியும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் மாா்ச் 15-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu