சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி எம்.பி.க்கள் மனு

மத்திய அமைச்சரிடம் விடுதலை சிறுத்தை கட்சி எம்.பி.க்கள் மனு அளித்தனர்.
Villupuram News -விழுப்புரம் மாவட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை டோல்கேட்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 56 பேரை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி மத்திய மந்திரி வி. கே.சிங்கிடம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் தனித்தனியே மனு கொடுத்தனர், அப்போது மனுவை பெற்ற ஒன்றிய அமைச்சர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை.ரவிக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 27 திட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தில் விடப்பட்டுள்ளன. ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் அவுட்சோர்சிங் முறையில் டோல் பிளாசாக்களை துணை ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த சுங்கச்சாவடிகளில் 10 முதல் 15 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரியும் தொழிலாளர்கள், நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி கட்டண வசூல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் சட்டவிரோதமாக 56 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ,
உதவி தொழிலாளர் ஆணையர் உத்தரவிலும்(எண் 8/20/2022/PDY Dt 12.09.2022) மற்றும் RDO, திருக்கோவிலூர் Dt 20.102022 க்கு முன்பு நடந்த சமாதானக் கூட்டத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்திலும், தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் உடன்பாடு ஏற்பட்டது. இருந்தபோதிலும் பணியாளர்களை அவர்களை வேலையில் அமர்த்தி இருந்த நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளன.
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும், அரசியல் குழப்பமும் ஏற்பட்டு வருகிறது. எனவே அமைச்சர் தலையிட்டு, சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட 56 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதில் கேட்டுக்கொண்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் எம்.பி. ரவிக்குமார் சமூகமான தீர்வு காண்பதும் மேலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை எம்.பி. நிதியிலிருந்து செய்து கொடுப்பதும் மக்கள் பணியாக செய்து வருகிறார். இதனால் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி மக்களால் எம்.பி .ரவிக்குமார் பாராட்டப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu