விழுப்புரத்தில் சமூக நல்லாசிரியர் விருது: எம்பி ரவிக்குமார் வழங்கினார்

விழுப்புரத்தில் சமூக நல்லாசிரியர் விருது:  எம்பி ரவிக்குமார் வழங்கினார்
X

முட்டத்துார் ஓய்காப் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாபு செல்லதுரைக்கு சமூக நல்லாசிரியர் விருதை எம்பி ரவிக்குமார் வழங்கினார்

கொரோனா காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியரை பாராட்டி சமூக நல்லாசிரியர் விருதை எம்பி ரவிக்குமார் வழங்கினார்.

சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் விழுப்புரம் தமிழ் இலக்கிய அமைப்புகள், மாவட்ட ஆசிரியர் சங்கங்கள் ஆகியவற்றின் சார்பில் சமூக நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் நாடாாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், சமூகநல அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சகாயராஜ், மாவட்ட தன்னார்வ ரத்ததான இயக்க செயலாளர் கோபிநாத், மல்லர் கம்பம் கழகம் உலகதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதுணையாக கொரோனா கட்டுப்பாட்டு அறை பணி செய்தல், துாய்மை பணியாளர்களுக்கு சொந்த செலவில் சேவை செய்தல் ஆகியவற்றுக்காக முட்டத்துார் ஓய்காப் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாபு செல்லதுரையின் சிறப்பான பணிகளை பாராட்டி சமூக நல்லாசிரியர் விருதை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வழங்கி பாராட்டி பேசினார்.

மருதம் ஒருங்கிணைப்பாளர் ரவிகார்த்திகேயன், தமிழ் இலக்கிய அமைப்பு எழில் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி, பாராட்டி பேசினர்,

Tags

Next Story