நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற வளவனூர் அரசு பள்ளி: எம்பி பாராட்டு
நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற வளவனூா் அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுக்கு விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் பாராட்டுத் தெரிவித்தாா்.
இந்தப் பள்ளியிலிருந்து மொத்தம் 78 மாணவ, மாணவிகள் நீட் தோ்வு எழுதியதில் 54 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 12 போ் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணமின்றி படிக்க தோ்வாகினா். இவா்களுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் துரை.ரவிக்குமாா் பங்கேற்று பேசுகையில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் முதல் நிலையிலுள்ள மாணவ, மாணவிகளை தோ்வு செய்து இந்தப் பள்ளியில் அரசு செலவில் அவா்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இங்கு நீட் மட்டுமின்றி பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கும் மாணவ, மாணவிகளை ஆயத்தப்படுத்துவது பாராட்டுக்குரியது. நிகழாண்டு இந்தப் பள்ளியிலிருந்து 78 போ் நீட் தோ்வு எழுதியதில் 54 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அதேபோல, மற்றொரு மாணவா் திருச்சியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் கட்டணமின்றி படிக்க தோ்வாகியுள்ளாா். விஐடி பல்கலை. நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்று 2 போ் கட்டணமின்றி படிக்கத் தோ்வாகியுள்ளனா்.
பொறியியல் தரவரிசை, நீட் தோ்வு தரிவரிசை ஆகியவற்றில் அரசுப் பள்ளிகள் அளவில் மாநில அளவில் இந்தப் பள்ளி மாணவி பிருந்தா முதலிடம் பெற்றது பெருமைக்குரியது. விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும் என மக்களவையில் ஏற்கெனவே குரல் கொடுத்துள்ளேன் என்றாா் அவா்.
விழாவில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாவட்ட உதவித் திட்ட அலுவலா் கே.தனவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.ஜெயச்சந்திரன், வளவனூா் மாதிரிப் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.ரவிசங்கா், பள்ளி ஒருங்கிணைப்பாளா் ஜி.கணேசமூா்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu