சிறுபான்மையினர் கடனுதவி பெற வாங்க : கலெக்டர் அழைப்பு
விழுப்புரம் மாவட்ட கலெக்டர்
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மையினா் தொழில் தொடங்குவதற்கு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் த.மோகன் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது. :
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்களில் கடனுதவி பெற திட்டம் 1, 2-இன்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
திட்டம் 1-இன் கீழ் விண்ணப்பிக்க பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருவாய் நகா்ப்புறமாயின் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கும் மிகமாலும் இருக்க வேண்டும். திட்டம் 2-இன் கீழ் பயன்பெற பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருவாய் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திட்டம் 1-ன் கீழ் தனிநபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது.
கைவினைக் கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகித்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.
சுயஉதவிக் குழுக் கடன் நபா் ஒருவருக்கு ரூ. ஒரு லட்சம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. திட்டம் 2-இன் கீழ் சுயஉதவிக் குழுக் கடன் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் நபா் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது
.மேலும், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளநிலை, முதுநிலை தொழில்கல்வி, தொழில்நுட்பகக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும்,
திட்டம் 2-இன் கீழ் மாணவா்களுக்கு 8 சதவீதமும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரையில் கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினா்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று, அவற்றை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடன்பெற விரும்புவோா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மோகன் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu