முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை
X

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அமைச்சர் பொன்முடி.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி.க்கு அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி.க்கு தி.மு.க. அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அத்தியூர், திருவாதி, வேலியம்பாக்கம் ஆகிய ஊராட்சி கிளைக்கழகங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. அரசியலில் ஈடுபாடு கொண்ட வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஆனால் தந்தையைப்பின்பற்றி அரசியலுக்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தி.மு.க.வை பற்றியோ அல்லது வாரிசு அரசியலைப்பற்றியோ பேசுவதற்கு எந்தத்தகுதியும் கிடையாது. அரசியல் நாகரீகம் இல்லாமல் பேசும் சி.வி.சண்முகம், விரைவில் தி.மு.க.விற்கு தக்க பதில் சொல்லியே ஆக வேண்டும். தி.மு.க.வை குறைகூறுவதை சி.வி.சண்முகம் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஊரை ஏமாற்றிவிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருக்கும் சி.வி.சண்முகம், தன்னுடன் இருந்த லட்சுமணனைகூட ஒன்றாக வைத்திருக்க தெரியாத நபர்தான். சி.வி.சண்முகம், தரங்கெட்டு பேசுவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். நண்பராக இருந்தாலும் நாகரீகமாக பேசவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

விழாவில் மாவட்ட துணை செயலாளர் தயா.இளந்திரையன், ஒன்றிய செயலாளர்கள் முருகவேல், மும்மூர்த்தி, கல்பட்டு ராஜா, முருகன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் புகழ்.செல்வக்குமார், ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், மாவட்ட கவுன்சிலர்கள் வனிதா அரிராமன், தமிழ்செல்வி கேசவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகஜோதி, மீனாட்சி அழகப்பன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் உஷாஜோதி, கனகஜோதி, கிளை செயலாளர்கள் அரிராமன், ராமதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story