விழுப்புரத்தில் கருணை பணி நியமன ஆணை: அமைச்சர் பொன்முடி வழங்கினார்

விழுப்புரத்தில் கருணை பணி நியமன ஆணை: அமைச்சர் பொன்முடி வழங்கினார்
X

மின் வாரியத்தில் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கியஅமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மின் வாரியத்தில் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், விழுப்புரம் மின்பகிர்மான கழகத்தில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் மரணமடைந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் நான்கு வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை அமைச்சர் பொன்முடி இன்று (12.11.2021 வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் த.மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் விக்கிரவாண்டி, விழுப்புரம், விழுப்புரம் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மண்டல தலைமை பொறியாளர் பொட்ரான்ட் ரஸ்ஸல், மேற்பார்வை பொறியாளர் குமாரசுவாமி. செயற்பொறியாளர் மதனகோபால் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!